Friday, 19 September 2014

வேலைக்கு செல்லும் பெண்கள்          
அதிகாலை எழுந்திருக்க
ஐந்து மணிக்கு அலாரம் வைத்து,
அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து,
காபி,டிபன் மற்றும் சமையலை
அவசரமாக செய்யும் போது ,
கணவர் கேட்பார் "அயர்ன் செய்த ஷர்ட் எங்கே?"
குழந்தை கேட்கும் "அம்மா என் சாக்ஸ் எங்கே?"
அவரவர் தேவை அவரவர்க்கு.
அனைவருக்கும் அலுக்காமல் பதில் சொல்லி
அனைவரையும் கிளப்பி விட்டு
அவசராமாய் கிளம்பி
வேலைக்கு செல்லும்போது
ஞாபகத்திற்கு வருவது
சாம்பாரில் உப்பு போட்டோமா?
மீதமிருந்த பாலை ஃப்ரிட்ஜில் வைத்தோமா?
கேஸ் ஆஃப் செய்தோமா?
அப்பப்பா! அதே நினைவுடன்
அலுவலகம் சென்று அங்குள்ள
பணிகளையும் செவ்வனே செய்து
மீண்டும் மாலை வீடு திரும்பி
அடுக்களை வேலை முடித்து
குழந்தைகள் படிப்பில் உதவி
அவரவர்க்கு பிடித்த உணவை
செய்து கொடுத்து,
மீதமிருந்த உணவை தான் சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டும்.
இப்படி இருக்கும் இரண்டு கைகளில்
பல அவதாரம் எடுக்கும் பெண்னை
சில குடும்பத்தினர்
               உனக்கு ஒன்றும் தெரியாது.
                 சரியாக சமைக்கவில்லை
                   என்று எதையாவது குறை கூறிக்கொண்டே இருப்பது.
வேலைக்கு செல்லும் பெண்களில் எத்தனை பேர் தனக்காக நேரம் ஒதுக்கி தனக்கு பிடித்ததை சமைத்து
சாப்பிட நேரம் இருக்கிறது?
குடும்பத்தின் தூணாக இருந்து தாங்கிப் பிடிக்கும் பெண்களை தூக்கி வைத்து கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை,
        அலட்சியமாய் ஒதுக்க வேண்டாம்
          என்பது என் வேண்டுகோள்.
அனைவருக்கும் பண்டிகை என்றால் அரசு விடுமுறை.
ஆனால் பெண்களுக்கு ஏது விடுமுறை
எனக்கு தெரிந்த ஒரு தோழி அமாவாசை அன்று
மாமனாருக்கு சமைப்பதற்காகவே மாதம் ஒரு நாள் விடுப்பு எடுப்பார்.
எனக்கு தெரிந்த இன்னொரு தோழி ஒரு பொறியியல் பட்டதாரி. கணவரை விட
அதிகம் சம்பாதிக்கிறார்.
ஆனாலும் அவருடைய டி எம் கார்டு அவர் கணவரிடம் இருக்கும்.தினமும் பேருந்துக் கட்டணத் தொகயை மட்டும் தன் கணவரிடம் இருந்து பெற்று வருவார்.
குழந்தைகளின் விடுமுறை நாட்களில்
பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு வரும் பெண்களும் உண்டு.
குழந்தைகளை கிளப்பும் அவசரத்தில் காலையில் திட்டிவிட்டு ப்ணிக்கு வந்ததும் அதை எண்ணி வருந்தும் பெண்களும் உண்டு.
ஆகவே பெண்களுக்கும் உணர்வுகள் , விருப்பு வெறுப்புகள் உண்டு என்பதை குடும்பதினர் புரிந்து கொண்டு அன்புடன் நடத்த வேண்டும்.
 குடும்பதினர் ஆதரவு இருந்தால் எவ்வளவு பெரிய மலையையும் சுமப்பாள் பெண்.
5 comments:

Mythily kasthuri rengan said...

ஒவ்வொரு காலையும் கண் முன் கொண்டுவருகிறது கவிதை!! அழகு !! வாழ்த்துகள் தோழி!

anitha shiva said...

நன்றி தோழி.என்றும் பெண்களுக்கு நிகர் பெண்களே.

Muthu Nilavan said...

“நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை,
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக் கில்லை“ என்று எழுதிய கந்தவனின் “இரண்டாவது ஷிப்ட்“ கதையை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அது! பெண்களுக்கான “ஊட்று“ எனும் இணைய தளத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன். அருமை. தொடருங்கள்

anitha shiva said...

நன்றி அய்யா.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வணக்கம், வலைச்சரத்தில் உங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_4.html#comment-form