சென்ற வாரம் எங்கள் கல்லூரியில் நடந்த நிகழ்வு.எங்கள் கல்லூரி விளையாட்டுத் திடலை ஒட்டி மாணவர்களின் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது.ஒரு மாணவன் கல்லூரி நேரம் முடிந்த பின் அவன் வாகனத்தின் மீது அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு விளையாட்டுத் திடலில் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு துறையைச் சார்ந்த மணவனின் பந்து அவன் வாகனத்தின் மீது பட்டுவிட்டது.அவனும் இவனும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ள பிரச்சினை முற்றி பெரிதாகி விட்டது.மறுநாள் காலை பாட இடைவேளையின் போது அந்த இரு மாணவர்களுக்காக அவர்களின் நன்பர்களும் சேர்ந்து சண்டையிட்டு, அது மிகப் பெரிய கலவரத்தையே உண்டு பண்ணிவிட்டது.
சற்று நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும்,அடித்துக் கொண்டும் கோஷங்கள் எழுப்பி கூச்சலிட்டனர் சத்தம் கேட்டு நாங்கள் ஓடி வந்து பார்த்து அடிதடியை விலக்கும் இரண்டு நிமிடத்திற்க்குள் இரண்டு மாணவர்களை ரத்தம் வருமளவு அடித்து விட்டனர்.
பின் ஒருவாராக நிலைமையை சமாளித்து கூட்டத்தை கட்டுப் படுத்தி மாணவர்களை அமைதிப் படுத்துவதற்குள் நிர்வாகமும், ஆசிரியர்களும் திண்டாடிப் போனோம்.பிரச்சினைக்குரிய மாணவர்களைத்
தனியே அழைத்து இரு தரப்பிலும் எவ்வளவோ அமைதியாக எடுத்துக் கூறியும் அவர்கள் புத்தி ஏற்றுக்கொள்கிறது ஆனால் மனதால் ஏற்க மறுக்கின்றனர்.
அவர்களைத் தூண்டிவிட்டு பழிவாங்கும் செயல் குறையாமல் பார்த்துக் கொள்ள வேறு அவர்களை சுற்றி ஒரு கூட்டம்.எங்கள் கல்லூரியின் எழுதப்படாத சட்டமே எந்த காரணத்திற்காகவும் மாணவர்களை அடிக்கவோ அல்லது மாணவர் மனம் புண்படும் படி பேசவோகூடாது என்பது தான்.இப்படிப் பட்ட பயிலகத்தில் பயிலும் இவர்களுக்கு எப்படி வன்முறை உணர்வு வந்தது?
கடைசியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு வைத்து பிரச்சினையை ஒருவாராக முடித்தோம்
என்னுடைய ஆதங்கம் என்னவென்றால்,
இந்த பதினட்டு வயதில் இவ்வுளவு வன்முறையை விதைத்தது ஊடகங்களா? அல்லது சமுதாயமா?
இளம் வயதில் போராடும் குணம் இருப்பது தவறில்லை.ஆனால் எதற்க்காக போராடுகிறோம் என்பது முக்கியம்.மாணவர்களின் தேவை என்ன என்பதையே
அவர்கள் புரிந்து கொள்ள்வில்லை.
சக மாணவனை நன்பனாக சகோதரனாக பாவிக்கும் மனப்பான்மை ஏன் இல்லாமல் போய்விட்டது?ஒற்றுமையில்லையேல் வளர்ச்சி இருக்காது.இன்றைய இளம் தலைமுறையினர் அவர்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக சண்டையிட்டுக் கொள்வதையே பெருமையாக கருதுகின்றனர்.சக மாணவனை அடித்து துவைப்பது அவனுக்கு ஹீரோயிசமாக இருக்கிறது.
எனக்கு அன்று தோன்றியது என்னவென்றால் இப்படி சண்டையிட்டுக் கொள்ளும் இவர்களை அப்படியே கொத்தாக கொண்டு போய் இந்திய பாகிசுத்தான் எல்லையில் விட்டு விட்டு வந்துவிட வேண்டும்.
நன்றாக நம் நாட்டுக்காக சண்டையிடுங்களப்பா என்று.
2 comments:
சரியா சொன்னிங்க தோழி! கல்லூரி வயதில் இவர்களுக்கு கிடைக்கும் அளவற்ற சுதந்திரத்தை இப்படியா பாழாக்குவது!
அனிதா,
தங்கள் வேதனை புரிகிறது.
மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தில் மட்டுமே அவர்களின் திறமையைக் காட்ட வைக்காமல் இதற திறன்களிலும் கவனம் செலுத்த வைக்க வேண்டும். அப்போதுதான் இதிலெல்லாம் தம்முடைய நேரம் / திறமையை வீணாக்காமல் நல்ல வழிகளில் செலுத்துவார்கள். ஆரம்பக் கல்வியிலேயே இதனை ஆரம்பிக்க வேண்டும்.
Post a Comment