கணவனும் கண்மூட,
காலனும் தாமதிக்க,
மிச்சமிருக்கும்
வாழ்க்கையை
எப்படித்தான் கழிப்பதென நீயிருக்க?
பாராட்டி சீராட்டி,தாலாட்டி
வளர்த்த பிள்ளைகள்
உன்னைத் தெருவில்
தவிக்க விட்டுப்
போவார்கள் என்பதை
நீ
அப்போது அறிய வாய்ப்பில்லையே!
அப்படியென்ன உன்
மேல் வெறுப்பு?
பேயே ஆனாலும் தாய்
தான் அல்லவா?
உள்ளூரில் இரு
மகன்கள் வசதியாய் இருந்தும்
தாயே உனக்கு ஒருவேளை
உணவளிக்க மறுப்பதும் ஏன்?
பசியில் உன் வயிறு
எரிய, அவர்கள் வாழ்க்கை எப்படிக் குளிரும்?
என்றேனும் ஒரு
நாள் அவர்களும் வருவார்கள்
கோவில் வாசலில்
நீ அமர்ந்திருக்கும் இதே இடத்திற்கு
அப்போது நினைப்பார்கள்
உன்னை அம்மா என்று.
5 comments:
இன்றைய அவலங்களில்....தாயின் நிலையை நன்றாக சுட்டி இருக்கிறீர் சகோதரி.
மிகவும் அருமையான கவிதை! ஆனால் மனதை வலிக்க வைத்த வரிகள்! உண்மை இதுதான் அதனால்தான் வலிக்கின்றதோ..அருமை அருமை!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
அன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!
'பசியில் உன் வயிறு எரிய, அவர்கள் வாழ்க்கை எப்படிக் குளிரும்?' சுட்டெரிக்கும் வரிகள். சிலரின் தவறான வாழ்க்கைமுறைகளைச் சுட்டும் வரிகள். நீண்ட இடைவெளி தராமல் அவ்வப்போது எழுதிட வேண்டுகிறேன்.
Post a Comment