எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்து,
ஒன்றானோம் வகுப்பறையில்.
என்றும் அழியாது
நட்பின் வாசனை.
வகுப்பறையும்,
நூலகமும்,
கேண்டீன் சிரிப்புகளும்,
பகடிவிதை சேட்டைகளும்,
கல்லூரி விழாக்களும்,
செய்முறை தேர்வுகளும்,
தேர்வு நேர பரபரப்புகளும்,
பேரசிரியர்களின்
பேரன்பும்,
அப்பப்பா…..,அப்பப்பா………!
அப்போதெல்லாம்
அன்றலர்ந்த மலர்களாய் நாம்.
அப்படியே அந்த
காலம் இருந்திருக்கக் கூடாதோ?
வருடங்கள் உருண்டு,
வயதுகள் கூடி,
வாழ்க்கை மாறினாலும்
நட்பின்
வாசனை மாறாது.
8 comments:
நட்பின் வாசம் நுகர்ந்தேன்!
"தேன்"
நட்புடன்,
புதுவை வேலு
இருக்கிறது, இருக்கும்.அருமை
எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்து,
ஒன்றானோம் வகுப்பறையில்.//
ஆம் அருமையான நட்பின் காலங்கள் அவை. மறக்கமுடியாத நினைவுகளோடே வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது.
அருமை........
என் farewell day நினைவுக்கு வந்துவிட்டது தோழி:((( i miss my friends:(((
வணக்கம் சகோதரி, உங்களின் தளத்தை “வலைச்சரம்“ வலைத்திரட்டியில் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் நம் சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பாராட்டி அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்தச் சுட்டியில் பார்க்க -http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_4.html
கவலையேது இல்லாமல்
சிட்டுக்குருவிகளாய்
சிறகடிக்கும் காலம்
அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.
நட்பின் இலக்கணமே அதுதானே சகோதரி! இல்லை என்றால் தூய்மை ஆகாதே நட்பு! அருமை!
Post a Comment