மாணவக்
கண்மணிகள்
உங்கள்
முகம் பார்க்கையில்
எங்கள்
அகம் மலர்கிறது.
பலப் பல கேள்விகளும் ,கேள்விகளுக்குள் தேடல்களும்,
உங்களால்
தான் நாங்களும் மாறுகிறோம் மாணவர்களய்.
பட்டாம்பூச்சிகள் நீங்கள், நித்தம் ஒளிரும் மின்மினிப் பூச்சிகள்.
உங்களால் தான் கவலைகள் மறக்கிறோம் நாங்கள்.
கள்ளமில்லா இந்த இளம் நெஞ்சங்களில்
இறைவன் குடியிருக்கிறார்.
பாடம் கேட்க விழிகள் விரிய ஆச்சரியத்தோடு
பூந்தோட்டப் பூக்களாய் உங்களைப் பார்க்கையில்தோன்றுகிறது
இதைவிட
உயரிய பணி உலகில் எதுவும் இல்லை.
என் அருமை மாணவக் கண்மணிகள்,
எத்தனை பிறவி எடுத்தாலும்
அத்தனையிலும்
ஆசிரியராய் பிறக்க வேண்டும்
6 comments:
உண்மைதான் சகோதரி.
நானும் உங்களைப் போலத்தான், எனது ஆசிரியப் பணியை மிகவும் விரும்பிச் செய்தேன். 15ஆண்டுக்கு முன்பே த.ஆ.தகுதி வந்தும் நானதை விரும்பாமல் ஆசிரியராகவே நீடித்தேன். எனது பணிமூப்புள்ள பலர், இப்போது முதன்மைக்கல்வி அலுவலராகிவிட்டார்கள். இப்போதும் என் முடிவை, சரியானதாகவே கருதி மிகுந்த நிறைவுடனே என் பணியை நிறைவு செய்து வெளிவந்தேன். நேரமிருக்கும்போது இந்த எனது பதிவைப் பார்க்க வேண்டுகிறேன் -http://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_31.html ஆசிரியப்பணி அறப்பணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆமாம், இந்த அர்ப்பணிப்பையும், அன்பையும் அளந்து மதிப்பெண் போட்டு, ஆசிரியர் தேர்வுவாரியத்தினர் பணிஆணை வழங்கினால் எப்படி இருக்கும்? (இப்பொழுது இருக்கும் 95விழுக்காட்டினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் இல்ல?)
உயரிய பணி உலகில் எதுவும் இல்லை.//
உண்மை தான் சகோ.
நல்ல கவிதை
அருமை...
வாழ்க ஆசிரியரே...
ஆம் சகோதரி! ஆசிரியப் பணி மிகவும் உயரிய பணி இவ்வுலகிலேயே! மேன்மை தாங்கிய பணி! அருமையான வரிகள் ஆசிரியப் பெருமக்களைப் போற்றி!
அனைவரின் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி.
ஆசிரியப்பணி அறப்பணி இதற்கு ஈடு ஏதுமுண்டோ?
Post a Comment