காய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட
உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம்.
தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொடுத்த
தோசையின் முன்
தோற்றுப்போனது உலகின் சுவையான உணவு.
நெற்றியில் நீ இட்ட பத்தில் தெரிகிறது
உன் காதலின் நிறம்.
நொடி முள்ளாய் என்னை சுற்றி வந்தாய்.
மடியில் இட்டு தூங்க வைத்தாய்.உன்
பிடிக்குள் என்னை பார்த்துக் கொண்டாய்.
உன்னில் இன்னொரு அன்னை.
ஏ! காய்ச்சலே அவ்வப்போது வந்துவிட்டு போ...
என்
கணவனின் அன்பில் கண்ணீர் சிந்த.
ஏனென்றால் என் கணவன் அமைந்தது
அந்த இறைவனின் வரமே.
- அனிதா
காய்ச்சலின் போது என்னை கண்போல் கவனித்துக்
கொண்ட என் கணவருக்கு.....
12 comments:
அட அட..
“இளமையிலே காதல் வரும்,
எதுவரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலென்றால்
முதுமைவரை ஓடிவரும்“ - கண்ணதாசன்.
இதுதாங்க முழுமையான காதல்.
இதுதாங்க உண்மையான காதல் கவிதை!
வாழ்க வாழ்க வாழ்கவே!
காய்ச்சல் வாழ்க வாழ்கவே!
நன்றி அய்யா.
என்ன ஒரு அருமையான காதல்! அது அழகிய வரிகளில் ஓரு கவிதையாய்! மிகவும் ரசித்தோம். !// ஏ! காய்ச்சலே அவ்வப்போது வந்துவிட்டு போ...//
அருமையான உணர்வுக் கொதிப்பு சகோதரி!
சில நோவும் இன்பமும் கலந்த மகிழ்ச்சித் தருணங்கள்...!
வள்ளுவன் தெரியாமலா சொன்னான்,
“ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்“ என்று!
எனக்கு முன்பே பின்னூட்டமிட்ட ஆசான்களின் கருத்தே போதுமே..தங்கள் கவிதையின் தரம் காட்ட!
வாழ்த்துகள்!
நன்றி
ஆஹா கவிதையில் காதல் மழை பொழிகின்றது கணவர் மேல்)))))))))))))))))))))))))))))
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோதரரே.
தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
மனதில் உள்ள காதல் சில நேரம் என்னையும் அறியாமல் இப்படி பொங்கி விடுவது உண்டு.
தங்கள் வருகைக்கு நன்றி.
அனிதா,கவிதைமழைஎனைநனைத்துவிட்டதுஅருமையான(உண்மையான)காதல்வரிகள்.
அனிதாவின் கவிதையில் ஹனிதா-ண்டவமாடியது.
காய்ச்சலுக்கு கவிதையில் அழைப்பு பிரமாதம்.
கணவனுக்கு இப்படியும் நன்றி சொல்லமுடியுமோ?
வாழ்த்துக்கள்.
சந்திப்போம், வாருங்கள் எமது பதிவுகளுக்குள்.
கோ
அழகியப் பதிவு..!!
Post a Comment