தெய்வங்களுக்கு
ஒரு தினம்
உலகைப் படைப்பவள்
தெய்வம் தானே.
அடுக்களையே அலுவலகமாய்,
குடும்பத்தின்
தேவையே தன் தேவையாய்,
குழந்தைகள் விருப்பமே
தன் விருப்பமாய்,
மற்றவர்களுக்காக
தன்னை மாற்றி,
தன்னைத் தொலைத்து
மெழுகாய் வாழும்
பெண்களுக்கு, மகளிர் தின
வாழ்த்துக்கள்.
பெண்கள் எதிர்பார்பதெல்லாம்
சின்னதாய் ஒரு
சிரிப்பும்,
சினேகமாய் ஒரு
பார்வையும்
அக்கறையாய் சிறு
நலம் விசாரிப்புகளும் மட்டுமே.
ஆகவே பெண்கள் தினம்
கொண்டாட வேண்டுமென்றால்
அனுதினமும் கொண்டாடுவோம்.
9 comments:
வித்தியாசமான சிந்தனை என்றும் சொல்லலாம், பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம். எளிய - கூர்மையான கவிதை.
(நீஙகள் பேரா.ப.கல்பனாவின் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா சகோதரி? வலையில் பிடியுங்கள். உங்கள் எழுத்து, அவர்களின் இயல்பான நடைபோல வருகிறது)
சரியே...
என்றும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் சகோ
வரிகள் அருமை! எல்லா த்னமுமே பெண்கல் தினம் தான்! வாழ்த்துக்கள் சகோதரி!
பெண்கள் எதிர்பார்பதெல்லாம்
சின்னதாய் ஒரு சிரிப்பும்,
சினேகமாய் ஒரு பார்வையும்
அக்கறையாய் சிறு நலம் விசாரிப்புகளும் மட்டுமே.//
அழகா பெண்களின் மனந்தை பிரதிபலித்து இருக்கிறீர்கள் சகோ.
வாழ்த்துக்கள்.கவிதைக்கு...
மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்கள் எதிர்பார்பதெல்லாம்
சின்னதாய் ஒரு சிரிப்பும்,
சினேகமாய் ஒரு பார்வையும்
அக்கறையாய் சிறு நலம் விசாரிப்புகளும் மட்டுமே.
உண்மையான வரிகள், வாழ்த்துகள்.
புதுமையான சிந்தனை அருமை
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...
கில்லர்ஜி
அருமை அருமை பெண்கள்தின நல்வாழ்த்துக்கள்.
அருமை அனிதா (தாமதமாக) பெண்கள்தினவாழ்த்துக்கள்.
Post a Comment