Tuesday 27 September 2016

மகள் எனும் இளவரசி





குண்டுக் கண்களும் ,
கொள்ளை கொள்ளும்
வெள்ளை சிரிப்புமாய்
வீடு முழுக்க அன்பு மணம்
பரப்பி , புன்னகை தேவதையாக
வலம் வருகிறாள்
என் செல்ல இளவரசி.

நான் சொல்வதை முதலில்
கேளுங்கள் எனும் அன்புக்
கட்டளையில் தொற்றுப் போகிறேன் நான்.

பிஞ்சு தென்றல்
 நடந்து சென்றால்
கை  வீசி நடக்கும் வானவில்

கண்கள் விரிய கதைகள்
சொன்னால் பேசும்
மோனாலிசா ஓவியம்.

விளையாடினால்
துள்ளிக் குதிக்கும்
மூன்று வயது முத்துக் குவியல்.

நடனமாடினால்
மனதை மயக்கும்
தங்க மான்குட்டி .

அன்பு செய்தால் ,
குட்டித் தம்பியை கொஞ்சி
மகிழும் அன்புத் தாய்  .

பள்ளி சென்றால் ,
பாடம் பயிலும்
பூந்தோட்டம்.

கோவில் சென்றால்,
கடவுளை வணங்கும்
குட்டி தெய்வம்.

இந்த இளவரசி வாழும் இல்லம்
அரண்மனை ஆகிறது
அவளின் அன்பினால்.


                                                                     --  அனிதா சிவா. 






2 comments:

சிவகுமாரன் said...

ஆகா.
இளவரசியைப் பெற்ற மகாராணி வாழ்க பல்லாண்டு.

anitha shiva said...

இளவரசி அல்ல ஒரே ஒரு இளவரசன் தான் இருக்கிறார் எங்களை ஆட்சி செய்ய.