Friday 30 September 2016

அழகுக் குறிப்புகள்




அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
        பயனுள்ள சில இயற்கை அழகுக் குறிப்புகள் பற்றிக் கணலாம்.இயற்கயாகவே கிடைக்கும் சில பொருட்கள் நல்ல  மருத்துவ குணங்களும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதது.

1. தயிர்


      நம் அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை
வெயிலில் அலைவதால் ஏற்படும் கருமை. அதிகம் வெயிலில் நம் சருமம் இருந்தால், நமது உண்மையான நிறம் மங்கிவிடும். அதற்கு நல்ல தீர்வு தயிர்.தயிரை முகம் முழுவதும் பூசி ,நன்கு காய்ந்தவுடன்கழுவி வரகருமைநிறம்மாறும்.இதைதொடர்ச்சியாக ஒரு வாரம் செய்து வந்தால்நல்ல மாற்றம் தெரியும்.கரும் புள்ளிகள் கண்டிப்பாக மறையும்.

2 டேபிள ஸ்பூன் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைசாறும்,1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறும் கலந்து பின் வடிகட்டி முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும். கருமை விரைவில் மாறும்.


2. கற்றாழை


        தலை முதல் கால் வரை பூசிக் கொள்ளும்
மருத்துவ குணம் உள்ளது கற்றாழை.கற்றாழையை எடுத்து அதை இரண்டாகப் பிளந்து அதில் உள்ளசோற்றை எடுத்து அதைமுகத்தில் பூசி வரமுகம் பிரகாசிக்கும், பளபளப்பாகும்.

3. பப்பாளி



          இயற்கையின்  அற்புதக் கொடை பப்பாளி. பப்பாளிப் பழத்தினை எடுத்து மசித்து முகத்தில் பூசி15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மினுமினுக்கும். பருக்களால் ஏற்ப்பட்ட தழும்புகளும் கரும்புள்ளிகளும் மறையும். வெயில் காலங்களில் குளிர்சாதனப்பெட்டியில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தும் பயன்படுத்தலாம்.
                                                                                     -- அனிதா சிவா

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பயனுள்ள குறிப்புகள்

கீதா

சிவகுமாரன் said...

என்ன இது. இவை எல்லாவற்றையும் முகத்தில் பூசுவதற்குப் பதில் வயிற்றுக்குள் தள்ளினால் அழகாகி விடலாம் போலிருக்கிறது

anitha shiva said...

ஹா... ஹா.....