Monday, 21 July 2014

சில நினைவுகள் அழியாது

ஏதோ ஒரு பேருந்து நிருத்தத்தின் ,

எந்கிருந்தோ வரும் ,

ஒரு பாடல் கிளறி விட்டுச் செல்கிறது

உன் நினைவுகளை.

நாம் சேர்ந்து பயணித்த பேருந்து

திடீரென்று கடந்து போகையில்

நான் உடைந்து போகின்றேன்.


எங்கேயோ விற்பனைக்கு

வைக்கப்பட்டுள்ள

பூக்களின் வாசத்தில்

வந்து போகிறது

நீ எனக்கு வாங்கித தந்த

பரிசு.

நீ எழுதிப் பார்த்த பேனாவின்

ஒரு ஒரத்தில் ஒளிந்திருக்கிறது

நீ என்னை பார்த்து வழக்கமாய்

சிரிக்கும் சிரிப்பு.

இப்படி இல்லாத நீ

எப்படி ஏதாவது ஒரு

நினைவுகளாய் என்னைச் சுற்றி?
தலைப்பைச் சேருங்கள்

No comments: